உள்ளூர் செய்திகள்
தாளமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பகோணம் மேலக்காவேரி தாளமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 200 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது.
சுவாமிமலை:
கும்பகோணம் மேலக்காவேரி பெரும்பாண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற, சுடலை காக்கும், தாளமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையானது.
இக்கோயில் சிதலமடைந்து இருந்தது. கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 200 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்பகுதி மக்கள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிவு செய்து திருப்பணிகள் நடந்தது.
பணிகள் நிறைவு செய்த பின்னர் நேற்று காவிரியில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி, கணபதி, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து 2&ம் கால யாகசாலை பூஜைகள், இன்று லட்சுமி பூஜை, நவதுர்கா பாராயணம் ஆகியவற்றும் மகா பூர்ணாஹீதி நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க, கடங்கள் புறப்பாடும் தொடர்ந்து மகாகும்பாபிஷேகம்நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.