உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குடியாத்தம் ஓட்டலில் திருடிய தொழிலாளி கைது

Published On 2022-03-13 15:15 IST   |   Update On 2022-03-13 15:15:00 IST
குடியாத்தம் ஓட்டலில் திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் அண்ணா தெருவில் பிரபல ஓட்டலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு மர்ம நபர் ஓட்டலின் மாடிப்பகுதி வழியாக உள்ளே இறங்கி கண்காணிப்பு கேமராக்களின் மானிட்டரை திருடிச் சென்றுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது இது குறித்து இந்த ஓட்டலின் மேலாளர் ரஞ்சித் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். கண்காணிப்பு கேமராக்களின் பதிவினை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

விசாரணையில் குடியாத்தம் பிச்சனூர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த சோபன்பாபு (வயது 40) தொழிலாளி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் சோபன்பாபுவை கைது செய்து அவரிடம் இருந்த சிசிடிவி கேமராக்களின் மானிட்டரை பறிமுதல் செய்தனர்.

Similar News