உள்ளூர் செய்திகள்
தொண்டி பாலத்தில் ஒளிரும் மின்விளக்குகள்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பாலத்தில் ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியானது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியில் உள்ள கடலோர பகுதியாகும். இந்த வழியாக சிதம்பரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் இருந்து ராமேசுவரம், ஏர்வாடி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரளா மாநிலத்தின் எல்லைப்பகுதியான களியக்காவிளை போன்ற பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
போக்குவரத்து அதிகம் உள்ள இந்தப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையால் ஒளிரும் விளக்குகள் பாலத்தில் பொருத்தப்பட்டது. இந்தப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்து நடப்பதால் விபத்து நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து எச்சரிக்கை பலகைகள் பொருத்தவும் வாகனஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.