உள்ளூர் செய்திகள்
உழவர் சந்தை காய்கறிகளை தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வலியுறுத்தல்
உழவர் சந்தை காய்கறிகளை தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை :
தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச் செயலாளர் சு.மருதாசலம் கலந்து கொண்டு பேசினார்.
உதவி தோட்ட கலை அலுவலர்களுக்கு பயணப்படி மாதாமாதம் ரூ.600 வழங்கப்படுகிறது. பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ரூ.6000 வழங்க வேண்டும்.
2018-ம் ஆண்டு பணியில் சேர்ந்த உதவி தோட்ட கலை அலுவலர்கள் துறை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்.
உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் அனைத்தும் தோட்டக்கலைக்துறையை சார்ந்தது. ஆனால் அதனை வேளாண்மை துறைக்கு கொடுத்துள்ளனர்.
எனவே தோட்டக்கலைத்துறைக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.