உள்ளூர் செய்திகள்
விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்.

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு

Published On 2022-03-11 16:04 IST   |   Update On 2022-03-11 16:04:00 IST
வாலாஜா அனந்தலையில் வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு நடத்தினர்.
வாலாஜா:

வாலாஜா அடுத்த கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் அனந்தலை கிராமத்தில் ஊரக தோட்டக்கலை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதில் உழவன் செயலி உபயோகத்தைப் பற்றியும், அவற்றின் நன்மைகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 
இந்த செயலி மூலம் விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம். 18 வகையான சேவைகள் உழவன் செயலி மூலம் பெற்று பயன்பெறலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News