உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை கடைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2022-03-11 06:23 GMT   |   Update On 2022-03-11 06:23 GMT
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு வைத்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உடுமலை:

உடுமலை நகராட்சி பகுதிகளில், கேரி பேக், டம்ளர்கள் என தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனையடுத்து சுகாதாரப்பிரிவு ஆய்வாளர் செல்வம், ராஜமோகன் உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட குழுவினர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததோடு அபராதமும் விதிக்கப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு வைத்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
Tags:    

Similar News