உள்ளூர் செய்திகள்
காவேரிப்பாக்கம் பி.டி.ஓ. அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கூட்டம் நடத்திய பஞ்.தலைவர்கள்
காவேரிப்பாக்கம் பி.டி.ஓ. அலுவலகத்தில் பஞ்.தலைவர்கள் தரையில் அமர்ந்து கூட்டம் நடத்தினர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது.
கூட்டம் நடத்த வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கை தராததால் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் பி-.டி.ஓ. அலுவலகம் முன்பு அமர்ந்து கூட்டத்தினை நடத்தினர்.
இதில் கூட்டமைப்பு தலைவர் அர்ஜுனன் செயலாளர் மோகனசுந்தரம் பொருளாளர் ராஜேந்திரன் கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து வேலைகளையும் ஊராட்சி மன்ற தலைவர் வாயிலாகத்தான் செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.