உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

இளநீரில் விஷம் கலக்கும் அபாயம்

Published On 2022-03-10 07:57 GMT   |   Update On 2022-03-10 07:57 GMT
உயர் ரக தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல், சிவப்பு வண்டு தாக்குதல் போன்ற நோய்கள் ஏற்பட்டன.
பல்லடம்:

பல்லடம் மற்றும் பொங்கலூர் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. நாட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் பயிரிட்ட நிலையில், உயர் ரக தென்னை அறிமுகமானது. 

வேகமான வளர்ச்சி, 3 வருடங்களில் காய்ப்பு வந்துவிடும். இளநீர் சுவை அதிகம், கூடுதல் விலை கிடைக்கும் என தென்னை உற்பத்தி நிறுவனங்கள் கூறியதால் விவசாயிகள் பெரும்பாலானோர் உயர் ரக தென்னை விவசாயத்தில் ஈடுபட்டனர் .

இந்தநிலையில் உயர் ரக தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல், சிவப்பு வண்டு தாக்குதல் போன்ற நோய்கள் ஏற்பட்டன. நாட்டு ரக தென்னை மரங்கள் இந்த நோய் தாக்குதலை தாக்குப்பிடித்து உள்ளன. 

காய்ப்புத் திறன் குறைந்தாலும் பெரிய அளவில் இந்த தென்னைமரங்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் உயர் ரக தென்னை மரங்கள் பூச்சிகள் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்காமல் வாடி,வதங்கி வருகின்றன. 

காய்ப்புத் திறன் முற்றிலும் இறந்துவிட்ட நிலையில் மரங்கள் பிடித்தார்போல் காணப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி சிலர் பூச்சி தாக்குதலுக்கு மருந்து வைக்கிறேன் என வசூல் வேட்டையிலும் ஈடுபடுகின்றனர்.

மேலும் அதிக விஷமுடைய மருந்துகள் தென்னை மரங்களின் வேரில் கட்டுகின்றனர். இதனால் தேங்காய், இளநீரில் விஷம் கலக்கும் அபாயம் உள்ளது. இந்த தென்னை மரத்தின் இளநீர் குடிப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே தென்னை மரத்தில் விஷ மருந்துகளை கட்டுவதை அரசு நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும். இவ்வாறு தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News