உள்ளூர் செய்திகள்
விளையாட்டு உபகரணங்களை வழங்கி பெண்கள் பங்கேற்ற கால்பந்து போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்த போது எடுத்த படம்

ராணிப்பேட்டையில் மகளிர் தினத்தை முன்னிட்டு கால்பந்து போட்டி

Published On 2022-03-09 15:44 IST   |   Update On 2022-03-09 15:44:00 IST
ராணிப்பேட்டையில் மகளிர் தினத்தை முன்னிட்டு கால்பந்து போட்டி நடைபெற்றது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை தனியார் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு  பெண்களுக்கான கால்பந்து போட்டி நடந்தது. 

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இல்லம் பெண்களுக்கு உலகம் ஆண்களுக்கு என்ற கூற்றினை மாற்றி ஓடி விளையாடு பாப்பா நீ ஒளிந்திருக்கலாகாதுபாப்பா என இப்பாடல் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பாரதியார் ஆவார். 

கல்வி ஒரு கண் என்றால் விளையாட்டு என்பது மற்றொரு கண். கல்வியை கற்றுத்தராத பாடங்களையெல்லாம் விளையாட்டானது கற்றுத்தரும். தோல்வி பெறாத எந்த ஒரு மனிதரும் வெற்றியை பெறுவதில்லை. 

தோல்வி பெறாத எந்த ஒரு மனிதரும் வெற்றியின் சுவை முழுவதும் சுவைப்பதில்லை. 

படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கிய ஒரு மனிதரை விட விளையாட்டுப் போட்டியில் தோல்வியுற்ற வீரர் சிறப்பாக செயலாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு. 

இவ்வாறு அவர் பேசினார். 

Similar News