உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்த காட்சி.

ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டுவரும் நெல் வகைகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும்

Published On 2022-03-09 10:04 GMT   |   Update On 2022-03-09 10:04 GMT
ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டுவரும் நெல் வகைகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் ----என சேத்துப்பட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையங்குளத்தூர் சமுதாய கூடத்தில்சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சி கள்) சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் சேத்துப்பட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராம விவசாயிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சேத்துப்பட்டு வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் கொள் முதல் செய்ய வேண்டும்.

சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் உர கடைகளில் விவசாயிகள் உரம் வாங்கும் போது கூடுதலாக விவசாய இடுபொருட்களை கட்டாயமாக வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகளை உண்டான பணத்தை வியாபாரிகள் வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் செலுத்துகிறார்களா என்று விசாரணை நடத்தி பணத்தை உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேத்துப்பட்டு அருகே உள்ள மேலத்தாங்கல் கூட்டு ரோட்டிலிருந்து மேலத்தாங்கல் கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.

எனவே இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். 

கூட்டத்தில் கால்நடை மருத்துவர் ஹரிகுமார் மின்வாரிய உதவி பொறியாளர் பக்தவசலம் பெரணமல்லூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் ராஜாராம் மற்றும் பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News