உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் பின்னலாடை ஆராய்ச்சி மையம் - மேயரிடம் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
பல மாநில அரசுகள் தங்கள் பகுதியில் பின்னலாடை தொழிலை வேரூன்றச்செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி புதிய மேயர் தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோரை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், துணை தலைவர் பழனிசாமி, பொது செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் சந்தித்து புதிய மேயர், துணை மேயருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜாசண்முகம் கூறியதாவது:
பல மாநில அரசுகள் தங்கள் பகுதியில் பின்னலாடை தொழிலை வேரூன்றச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. பின்னலாடை தொழிலை மென்மேலும் வளர்ச்சி பெறச் செய்வதன் மூலம் திருப்பூரை உலகம் போற்றும் நகராக மாற்றி காட்டமுடியும்.
இடம்பெயர்ந்த தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அரசு தொழில் துறையினர் இணைந்து திருப்பூரில் தொழிலாளர் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பின்னலாடை துறை சார்ந்த ஆராய்ச்சி மையம் உருவாக்க வேண்டும். நகர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.