உள்ளூர் செய்திகள்
சோழீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

சோழீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

Published On 2022-03-07 14:30 IST   |   Update On 2022-03-07 14:30:00 IST
குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் பாலாலயத்தில் சூரியனார்கோயில் ஆதீனம் பங்கேற்றார்.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பழைமை வாய்ந்த 
ஸ்ரீசோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 
கடந்த 2007-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது புணர்நிர்மானம் செய்து, கும்பாபிஷேகம் செய்வதற்கான 
பாலாலய பணிகள் தொடங்கியது.

இதற்காக யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, பாலஸ்தாபனம், விநாயகர் வழிபாடு, பிரவேசபலி, வாஸ்துசாந்தி மற்றும் சிறப்பு யாகங்கள் செய்து, 
கடம் புறப்பாடு நடைபெற்றது. 

கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கொண்டு, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், பைரவர், மஹாலெட்சுமி, தெட்சிணாமூர்த்தி 
உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, பந்தக்கால் முகூர்த்தம் மற்றும் பூமி பூஜை சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக 
பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. 

சந்திரசேகர சிவாச்சாரியார் சர்வசாதகம் செய்து வைத்தார்.

இதில், திருப்பணிச் செம்மல் சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன், அறநிலையத்துறை செயல் அலுவலர் நிர்மலாதேவி, பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News