உள்ளூர் செய்திகள்
குத்தாலத்தில் கிராம நாட்டாண்மை பிரச்சினையால் தம்பியை அண்ணன் குத்திக் கொன்றார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா பாலையூர்
அருகே உள்ள சிவனாரகரம் கிராமம் மேலத்தெருவைச்
சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). விவசாயியான இவர்
ஒரு வருடத்துக்கும் மேலாக அப்பகுதியில் நாட்டாண்மையாக இருந்து வருகிறார்.
இவருக்கும், அதே கிராமம் நடுத்தெருவில் வசிக்கும்
இவரது அண்ணன் பாண்டியன் (55) என்பவருக்கும்
ஒரு வருடத்திற்கு மேலாகியும் நாட்டாண்மையை மாற்றாதது
தொடர்பாகவும், பாண்டியன் வீட்டின் அருகில்
வடக்குமலையான் கோவில் கட்டுவது தொடர்பாகவும்
பிரச்சினை இருந்து வந்தது. அந்த இடம் பாண்டியனின்
புழக்கத்தில் இருந்ததால் அங்கு கோவில் கட்டுவதற்கு
பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
சம்பவத்தன்று இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமார் (26) ஆகியோர் செந்தில்குமாரை கத்தியால் குத்தினர்.
இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த
பாலையூர் போலீசார், பாண்டியன் மற்றும்
சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.