உள்ளூர் செய்திகள்
கைது

சென்னையில் தங்கி இருந்து போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் பெற்ற 5 பேர் கைது

Published On 2022-03-06 15:45 IST   |   Update On 2022-03-06 15:45:00 IST
இலங்கை நாட்டவர் என்பதை மறைத்து போலியான ஆவணங்கள் மூலம் ஜெரால்டு பாஸ்போர்ட் பெற்று இருப்பது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

போரூர்:

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் ஜெரால்டு கிலேசியஸ் (49). இவரது மனைவி மஞ்சுளா இவர்களது மகள்கள் மேரி ஜென்சிகா, மேரி சன்ஜிகா, மகன் ரிஜின்னோல்டு.

கடந்த 2007-ம் ஆண்டு குடும்பத்துடன் அகதியாக சென்னைக்கு வந்த ஜெரால்டு போரூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஜெரால்டு கிலேசியஸ் குடும்பத்துடன் கனடா நாட்டில் குடியேற முடிவு செய்து இலங்கை நாட்டவர் என்பதை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை, பான்கார்டு மற்றும் அடையாள அட்டைகள் பெற்று உள்ளனர்.

பின்னர் குடும்பத்தினர் அனைவரும் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்து பெற்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இலங்கை நாட்டவர் என்பதை மறைத்து போலியான ஆவணங்கள் மூலம் ஜெரால்டு பாஸ்போர்ட் பெற்று இருப்பது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போரூர் உதவி கமி‌ஷனர் பழனி மற்றும் போலீசார் மோசடியில் ஈடுபட்டு பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு தப்பி செல்ல முயன்ற ஜெரால்டு அவரது மனைவி மகள்கள், மகன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News