உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் அம்ரித் தகவல்
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற் கப்படுவதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவித்துள்ளார்.
ஊட்டி:
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற் கப்படுவதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாடு அரசின் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு ஆற்றியவர் களுக்காக பசுமை சாம்பியன் விருது வழங்கப்படவுள்ளது. இதில் தமிழகத்தில் 100 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொரு வருக்கும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
பசுமை சாம்பியன் விருதுக்கு தனி நபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நல சங்கங்கள், உள்ளாட்சிஅமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்கள்.
இவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் ஆற் றிய சிறப்பான பங்களிப்பு கணக்கில் கொள்ளப்பட்டு அவர்கள் பசுமை சாம்பியன் விருதுக்காக மதிப்பீடு செய்யப்படுவர்.
இவ்விருதுக்கு விண்ணப் பிப்போர் சுற்றுச் சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய பசுமைப் பொருள்கள் மற்றும் பசுமை தொழிற்நுட்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், நீடித்த நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் நிலைகள் பாதுகாப்பு, நீர் சேமிப்பு, காலநிலை மாற்றம் தவிர்ப்பு, காற்று மாசு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சூழலியல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான பணிகளில் ஆற்றிய பங்களிப்பு கருத்தில் கொள்ளப்படும்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருது வழங்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையிலும் 2 விருது கள் வழங்கப்பட வுள்ளன. விண்ணப்பங்களை மார்ச் 15&ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதகையிலுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.