உள்ளூர் செய்திகள்
பெண் மாவோயிஸ்டு ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்
கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் அவரை காவலில் எடுத்து விசாரிக்க தூதூர்மட்டம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நெடுகல்கம்பை கிராமத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி ஒரு மாவோயிஸ்டு கும்பல் வந்தது. அவர்கள் பழங்குடியின மக்களிடம் மூளை சலவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் வகையில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என துண்டு பிரசுரங்களை ஓட்டியதோடு மட்டுமில்லாமல், தங்களை மாவோயிஸ்டு இயக்கத்தில் இணைத்து கொண்டு அரசுக்கு எதிராக போராட வேண்டும் என அவர்களை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றிய விவரம் அறிந்ததும் கொலக்கொம்பை போலீசார், அந்த கிராமத்திற்கு சென்று விசாரித்து, 7 மாவோயிஸ்டுகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நெடுகல்கம்பை கிராமத்திற்கு வந்து சென்ற வழக்கில் டேனிஸ், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீமதி ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பரில் கேரள மாநிலத்தில், நெடுகல் கம்பை பகுதிக்கு வந்து சென்றதாக கர்நாடகாவை சேர்ந்த சாவித்திரியை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை கேரள மாநிலம் திருச்சூர் வையூர் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று சாவித்திரியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கேரளாவில் இருந்து ஊட்டிக்கு அழைத்து வந்தனர்.
கோர்ட்டில் நீதிபதி இல்லாததால் அவரை போலீசார் அழைத்து சென்றனர். இன்று அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்து ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வருகின்றனர். அங்கு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் அவரை காவலில் எடுத்து விசாரிக்க தூதூர்மட்டம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.