உள்ளூர் செய்திகள்
அரக்கோணத்தில் நகை கடை அதிபரை தாக்கி நகை, பணம் பறிப்பு
அரக்கோணத்தில் நகை கடை உரிமையாளரை தாக்கி 14 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம்:
அரக்கோணம் காந்தி ரோட்டில் நகை கடை நடத்தி வருபவர் பவுன்குமார் (வயது 46). இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி கொண்டு அருகில் உள்ள வீட்டிற்கு நடந்து. சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையை கடப்பதற்காக நின்று கொண்டு இருந்தார். அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த கொள்ளையர்கள் பவுன்குமாரை பைக்கில் இடித்து கீழே தள்ளினர்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பவுன்குமார் கையில் இருந்த பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
கொள்ளையர்கள் பறித்து சென்ற பையில் 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம், கடையின் சாவி ஆகியவை இருந்தது.
இச்சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.