உள்ளூர் செய்திகள்
ஊட்டி நகராட்சியில் தி.மு.கவின் பலம் 23 ஆக அதிகரிப்பு
தற்போது தி.மு.க. கூட்டணியில் 27 கவுன்சிலர்கள் உள்ளனர்
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சி, 11 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 294 வார்டு கவுன்சிலர்களும் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.
ஊட்டி நகராட்சிக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் தி.மு.க. 20 இடத்திலும், காங்கிரஸ் 6 இடத்திலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இவர்கள் அனைவரும் ஊட்டி நகர்மன்ற கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கவுன் சிலர்களாக பதவியேற்றனர்.அவர்களுக்கு கமிஷனர் காந்திராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆணையரின் நேர்முக உதவியாளர் பிரான்சிஸ் சேவியர் வரவேற்றார். மேலாளர் மரிய லூவிஸ் நன்றி கூறினார்.
தி.மு.க கூட்டணியில் த.மு.மு.கவுக்கு ஒரு வார்டு ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவரும் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சுயேட்சையாக போட்டியிட்டு சென்ற 3 பேரும் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதனால் ஊட்டி நகராட்சியில் தி.மு.க.வின் பலம் 23 ஆக உயர்ந்தது. தற்போது தி.மு.க. கூட்டணியில் 27 கவுன்சிலர்கள் உள்ளனர். 23 பேர் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் இருப்பதால் நகராட்சி தலைவர் பதவி, அந்த கட்சியே சேர்ந்தவரே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.