உள்ளூர் செய்திகள்
108 சிவாலயத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

108 சிவாலயத்தில் மகா சிவராத்திரி விழா

Published On 2022-03-02 09:26 GMT   |   Update On 2022-03-02 09:26 GMT
பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயத்தில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி கோவில், திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில், கோவில் தேவராயன் பேட்டை மச்சபுரீஸ்வரர் கோவில், பாபநாசம் வருண ஜலேஸ்வரர் கோவில், கோபுராஜபுரம் சொர்ணபுரீஸ்வரர் கோவில், உத்தாணி ஐராவதீஸ்வரர் கோவில், நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இரவு முதல் விடியற்காலை வரை 
4 கால பூஜைகள் நடைபெற்றது. 108 சிவாலயம், திருப்பாலைத்துறை பாலை வனநாதர் கோவில்களில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. 

இசை நாட்டிய கலைஞர்களின் திருமுறை, இன்னிசை மற்றும் பரதநாட்டியம் நடைபெற்றது.

விழாவில் கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஆய்வாளர் லெட்சுமி, போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி, பேரூராட்சி கவுன்சிலர் பூபதிராஜா, மாவட்ட அரிமா சங்க தலைவர் ஆறுமுகம், பாபநாசம் ஆன்மீக பேரவை அமைப்பாளர் சீனிவாசன், பொது மருத்துவர் கருணாநிதி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாஸ்கரன், ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன், கோயில் எழுத்தர்கள் கோபால கிருஷ்ணன், சங்கரமூர்த்தி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News