உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வேளாண் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பயிற்சி

Published On 2022-03-02 09:25 GMT   |   Update On 2022-03-02 09:25 GMT
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 10 பேர் ‘கிராம தங்கல்’ திட்டத்தின் கீழ் உடுமலை வட்டாரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை:

உடுமலை ஆண்டியக்கவுண்டனூர் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவிகள் ‘கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு’ நடத்தினர். கிராமங்களில் விவசாயிகள் மேற்கொள்ளும் பணிகளை அறிந்து கொள்ளும் வகையில் வேளாண் மாணவிகள் நேரடியாக சென்று பயிற்சி பெறுகின்றனர். இதற்காக அவர்கள் கிராமங்களை தேர்வு செய்து அங்கு சென்று இவற்றை அறிந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 10 பேர் ‘கிராம தங்கல்’ திட்டத்தின் கீழ் உடுமலை வட்டாரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் ஆண்டியக்கவுண்டனூரில் ஊர்மக்கள் மற்றும் விவசாயிகள் உதவியோடு, ‘கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு’ நடத்தினர்.

அதன்கீழ் அக்கிராமத்தின் சமூக வரைபடம், கிராம வள வரைபடம், பருவங்களும், பயிர்களையும் விளக்கும் வரைபடம் ஆகியவற்றை வரைந்தனர். கிராம மக்களுக்கு அதை விளக்கிக்கூறினர். அங்குள்ள பொன்மயில் நாற்றுப்பண்ணைக்கு சென்று, அதன் செயல்பாடுகளை, அறிந்து கொண்டதோடு விதை விதைப்பில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News