உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அரசு ஊழியர்களுக்கு அடிப்படை பயிற்சி

Published On 2022-03-02 09:23 GMT   |   Update On 2022-03-02 09:23 GMT
பயிற்சி வகுப்பில், ஓய்வு பெற்ற துணை கலெக்டர், கணக்கு அலுவலர்கள், உதவி இயக்குனர்கள் ஆகியோர் விரிவுரையாளர்களாக செயல்படுகின்றனர்.
உடுமலை:

சான்றிதழ், உதவித்தொகை மற்றும் பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் அரசு அலுவலகங்களை நாடுகின்றனர். அவர்களிடம் தேவையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு இப்பணிகளை முடித்து அரசு ஊழியர்கள் அவர்களிடம் வழங்கி வருகின்றனர்.

சான்றிதழ்கள் விரைந்து கிடைக்கும் வகையில், இ-சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. தற்போது அரசு அலுவலகங்களில் புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள், பதவி உயர்வு பெறும் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் அடிப்படை பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது.

மனிதவள மேலாண்மை துறையின் கீழ் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில், ஓய்வு பெற்ற துணை கலெக்டர், கணக்கு அலுவலர்கள், உதவி இயக்குனர்கள் ஆகியோர் விரிவுரையாளர்களாக செயல்படுகின்றனர்.

ஆனால் சில மாவட்டங்களில் விரிவுரையாளர்கள் நியமனத்தில் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஓய்வு பெற்ற தாசில்தார், உதவி கருவூல அலுவலர், உதவி கணக்கு அலுவலர், பி.டி.ஓ., உள்ளிட்டோரை விரிவுரையாளராக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கீழ்நிலை அதிகாரிகளைக்கொண்டு அரசு ஊழியர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மதிப்பூதியமாக ரூ. 22 ஆயிரம், பயணப்படி ஒரு அணிக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் வழங்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News