உள்ளூர் செய்திகள்
நெமிலி அருகே ஆர்வமுடன் திறனாய்வு தேர்வு எழுதிய மாணவர்கள்
நெமிலி அருகே ஆர்வமுடன் மாணவர்கள் திறனாய்வு தேர்வு எழுதினர்.
நெமிலி:
அரக்கோணம், ராணிப்பேட்டை என 2 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 9&ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேற்று ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது.
சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப் பாக்கம், பாணாவரம், கலவை, ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஒரு மாவட்டத்திற்கு தலா 50 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும் சான்றிதழும் அளிக்கப்படும்.மொத்தம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஊரக திறனாய்வு தேர்வை எழுதினர்.மாவட்ட கல்வி அதிகாரிகள் அங்குலட்சுமி, சுப்பராயன் தலைமையில் கண்காணிப்பாளர்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் பார்வையிட்டனர்.