உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணம் அருகே மினி வேனில் கடத்திய 1250 கிலோ ரேசன் அ£¤சி பறிமுதல்

Published On 2022-02-28 14:27 IST   |   Update On 2022-02-28 14:27:00 IST
அரக்கோணம் அருகே மினி வேனில் கடத்திய 1250 கிலோ ரேசன் அ£¤சி பறிமுதல் செய்யப்பட்டது.

அரக்கோணம்:

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் அ£¤சி கடத்தலை தடுக்கவும், அந்த செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பி£¤வு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பி£¤வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார்  மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில்  அரக்கோணம்  மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரேஷன் அ£¤சி அண்டை மாநிலத்திற்கு வாகனங்கள் மூலமாக  கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பி£¤வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்படி நேற்று விடியற்காலை அரக்கோணம் அடுத்த கடவா£¤ கண்டிகை பஸ் நிறுத்தம் அருகேயுள்ள பகுதியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பி£¤வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான  தனிப்படை போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை போலீசார் சோதனை செய்தனர். 

அதில், 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகள் என மொத்தம் 1250 கிலோ ரேஷன் அ£¤சி இருப்பதும் இதனை ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தொ¤ய வந்தது. 

போலீசார் ரேஷன் அ£¤சியுடன் வாகனத்தை பறிமுதல் செய்து கட்த்தலில் ஈடுபட்டவரை கைது செய்தனர். 

மேலும்,  இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என  உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பி£¤வு போலீசார் விசா£¤த்து வருகின்றனர்.

Similar News