உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெமிலி அருகே குட்கா விற்ற பெண் கைது

Published On 2022-02-27 14:52 IST   |   Update On 2022-02-27 14:52:00 IST
நெமிலி அருகே குட்கா விற்ற பெண்னை போலீசார் கைது செய்தனர்.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் பெண் ஒருவர் பங்க் கடை நடத்தி வருகிறார். 

இவர் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் பங்க் கடையில் சோதனை செய்தனர். அப்போது 20 பாக்கெட் இருப்பது தெரியவந்தது. 

அதனை பறிமுதல் செய்து பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News