உள்ளூர் செய்திகள்
வாலாஜா அருகே முசிறியில் கலெக்டர் ஆய்வு
வாலாஜா அருகே முசிறியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பார்வையிட்டு கிராம நிர்வாக அலுவலர் நாள்தோறும் கிராமத்திற்கு வருகின்றாரா?
தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் உறை கிணறு அமைக்கும் திட்டப் பணிகளையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.
பொதுமக்களின் தேவைகளை முறையாக கேட்டறிந்து தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அதிக அளவு மரங்களை நட வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டுக்கொண்டார்.