உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

படிக்கும் போதே மாணவர் மத்தியில் தொழில்முனைவோர் சிந்தனை மேலோங்க வேண்டும் தொழில்மைய மேலாளர் அறிவுறுத்தல்

Published On 2022-02-27 06:10 GMT   |   Update On 2022-02-27 06:10 GMT
அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும், பொருளாதார சமச்சீர் நிலையை எட்டுவதற்கும் குறு, சிறு நிறுவனங்கள் கைகொடுக்கின்றன.
திருப்பூர்:

திருப்பூர் முதலிபாளையம் 'நிப்ட் -டீ' கல்லூரியில், தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. 

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு பயிற்சி மைய இணை இயக்குனர் பழனிவேல் பேசுகையில், 

''நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது. மொத்த தொழில் நிறுவனங்களில் 90 சதவீதம் குறு, சிறு தொழில்களாகும். 

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும், பொருளாதார சமச்சீர் நிலையை எட்டுவதற்கும் குறு, சிறு நிறுவனங்கள் கைகொடுக்கின்றன. 

உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு 'ஸ்கில் இந்தியா' திட்டங்களை செயல்படுத்தி வருகிறது'' என்றார்.

மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கண்ணன் பேசுகையில், 

''ஒருநாட்டின் வளர்ச்சியில் தொழில்முனைவோரின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில், படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைப்பது சாத்தியமில்லாததாக உள்ளது. 

எனவே, படிக்கும்போதே மாணவர்கள், தொழில்முனைவோராகவேண்டும் என்கிற சிந்தனையை மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும். தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் மன திடம் மிகவும் முக்கியம் என்றார்.
Tags:    

Similar News