உள்ளூர் செய்திகள்
நெமிலி அருகே தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது
நெமிலி அருகே தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெமிலி:
நெமிலி அடுத்த மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது38). கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி ரமணி அரக்கோணத்தில் உள்ள தனியார் டெக்ஸ்டைலில் வேலை செய்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக பாலாஜி தனது பைக்கில் சென்றார்.
புதிய பஸ் நிலையம் அருகே வந்தபோது 3 பேர் பாலாஜியை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.
பணம் தர மறுத்ததால் மர்ம நபர்கள் கையில் அணிந்திருந்த இரும்பு காப்பால் பாலாஜியை தாக்கினர். பலத்த காயமடைந்த பாலாஜியின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1000-த்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடினர்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் பாலாஜி புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் வழிபறியில் ஈடுபட்ட வளர்புரத்தை சேர்ந்த சுபாஷ் (22). என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரைதேடி வருகின்றனர்.