உள்ளூர் செய்திகள்
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவி பூஜா குணசேகரிடம் அமைச்சர் வீடியோ கால் மூலம் பேசிய காட்சி.

வாலாஜா மாணவி உள்பட 4 பேர் உக்ரைனில் தவிப்பு- வீடியோ காலில் பேசிய அமைச்சர் காந்தி

Published On 2022-02-26 10:56 IST   |   Update On 2022-02-26 10:56:00 IST
வெளிநாட்டில் இருந்து மாணவி பூஜா குணசேகர் வீடியோகால் மூலம் அமைச்சர் காந்தியிடம் பேசினார். அப்போது அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தருவதாக அமைச்சர் காந்தி உறுதி அளித்தார்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகள் பூஜா குணசேகர் மற்றும் வடகால் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் சுபாஷ் சந்திரன் ஆகியோர் உக்ரைனில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வருகின்றனர்.

தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவி பூஜா குணசேகர், மாணவர் சுபாஷ் சந்திரன் ஆகியோர் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள்.

போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் உள்ள மாணவ, மாணவிகளை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்று அமைச்சர் காந்தியிடம் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.


அப்போது வெளிநாட்டில் இருந்து மாணவி பூஜா குணசேகர் வீடியோகால் மூலம் அமைச்சர் காந்தியிடம் பேசினார். அப்போது அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தருவதாக அமைச்சர் காந்தி உறுதி அளித்தார்.

இதேபோன்று உக்ரைனில் உள்ள தனது மகள் அனிதாவை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய மாநில அரசுகள் உதவி புரிய வேண்டுமென வாலாஜா பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேசபெருமாள் என்பவரும், ஆற்காடு தோப்புக்கானா பகுதியை சேர்ந்த சூரியநாராயணன் உக்ரைனில் உள்ள தனது மகன் ராஜ் என்பவரையும் இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய மாநில அரசுகள் உதவி புரிய வேண்டும் எனவும் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதையும் படியுங்கள்... உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் கண்ணீர் பேட்டி

Similar News