உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க கேனுடன் வந்ததை படத்தில் காணலாம்.

ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2022-02-24 13:39 IST   |   Update On 2022-02-24 13:39:00 IST
ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று பெண் ஒருவர் தனது மகளுடன் வந்தார். 

அப்போது திடீரென்று அவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை திறக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். 

இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராணிப்பேட்டை புதிய அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது 27) என்பதும் சொத்து பிரச்சினை காரணமாக புகார் அளிக்க வந்ததாக தெரிவித்தார். அப்போது போலீசாரிடம் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது தந்தையின் பூர்வீக சொத்தான எனக்கு பாத்தியப்பட்ட 3 ஏக்கர் 40 சென்ட் இடம் உள்ளது. 

அந்த இடத்தை விற்று தருவதாக எனது அக்கா கூறினார். இதையடுத்து தனது சொத்தை எனது அக்கா பெயருக்கு மாற்றி பத்திரம் எழுதி தந்தேன். அந்த இடத்தை ரூ.28 லட்சத்திற்கு விற்றனர். பின்னர் எனது அக்கா எங்களுக்கு பணத்தை தரவில்லை. 

இதுதொடர்பாக ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது 20 நாட்களுக்குள் பணத்தை தருவதாக எழுதிக்கொடுத்தார். அதன்பிறகும் பணம் தரவில்லை. பணத்தை கேட்டால் எங்களை மிரட்டுகிறார்.

இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன். எனவே விற்பனை செய்த இடத்திற்கான பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Similar News