உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

போலீஸ் சோதனையில் மிட்டாயுடன் சென்று சிக்கிய முகவர்

Published On 2022-02-22 16:18 IST   |   Update On 2022-02-22 16:18:00 IST
போலீசார் முகவர்களது சூவை கழற்றும்படி கூறி சோதனை செய்தனர்
கோவை:

வாக்கு எண்ணும் மையத்திற்கு பேனா, பேப்பர் தவிர மற்ற பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனை தெரிந்து கொண்ட சில முகவர்கள் தங்களது செல்போனை சூ விற்குள் மறைத்துக் கொண்டு சென்றதாக தெரிகிறது. 

இதனால் போலீசார் முகவர்களது சூவை கழற்றும்படி கூறி சோதனை செய்தனர். அப்போது  வாலிபர் ஒருவர் தனது சூவிற்குள்   ஏராளமான மிட்டாய்களை மறைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Similar News