உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

அந்தியூரில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே வாக்குவாதம்

Published On 2022-02-22 15:07 IST   |   Update On 2022-02-22 15:07:00 IST
அந்தியூர் ஓட்டு எண்ணும் மையத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.
அந்தியூர்:

அந்தியூர் ஓட்டு எண்ணும் மையத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை  தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப் பட்டது. 

அப்போது அந்தியூர் பேரூராட்சி அனைத்து வார்டுகளின் முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் குவிந்தனர். 

இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அப்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அவர்கள் எந்த வார்டு வாக்குகள் எண்ணப் படுகிறதோ? அவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். 

மற்றவர்களை வெளி யேற்ற வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். 

இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அனைவரும் வெளி யேற்றப்பட்டனர்.

இதை தொடர்ந்து அந்தந்த வார்டு முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.

Similar News