உள்ளூர் செய்திகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கனைகளுடன் கைப்பந்து சங்க செயலாளர் சிவகுமார், மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும்

தேசிய கைப்பந்து போட்டிக்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு

Published On 2022-02-21 15:19 IST   |   Update On 2022-02-21 15:19:00 IST
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய கைப்பந்து போட்டிக்கான தமிழக அணி மகளிர் அணி வீரர்கள் தேர்வு போட்டி நடை பெற்றது.
பெரம்பலூர்:

இந்திய கைப்பந்து சம்மேளனம் சார்பில் நடைபெறவுள்ள 37 வது சப் ஜூனியர் தேசிய கைப்பந்து போட்டிக்கான தமிழக மகளிர் அணி வீரர்கள் தேர்வு போட்டி பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடந்தது. 

தமிழ்நாடு  கைப்பந்து சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்து தேர்வு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாநில அளவில் 15 வயதுக்குட்பட்ட வீராங்கனைகள் 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

போட்டி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தேர்வுக்குழு உறுப்பினர்களும், கைப்பந்து பயிற்றுநர்களான வாசுதேவன், அசோக்குமார், ஹரிஹரன், சீதாராமன் ஆகியோர் முன்னின்று தமிழக மகளிர் அணி வீராங்கனைகளை தேர்வு செய்தனர். 

போட்டியில் நித்யா, ஜெயஸ்ரீ, ஜெயபாலா, ரேணுகா, புவனேஸ்வரி, ஆராதனா, தமிழ்செல்வி, தீபிகாதர்ஷினி, தர்ஷினி, ரஞ்ஜனி, ஆஷா, சுஜிதா, விசித்ரா, கோபிகா, லீனா, அருந்ததி, பிரியங்கா, அஸ்வினி ஆகியே 18 பேர் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். 

இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவிகள் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் தேர்வு செய்யப்பட்டோர்களுக்கு 3 நாட்களுக்கு பயிற்சி  அளிக்கப்படவுள்ளது. 

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயகுமாரி, டேக்குவாண்டோ பயிற்றுநர் தர்மராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தேர்வு செய்யப்பட்ட தமிழக மகளிர் கைப்பந்து அணியினர் உத்திரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் வரும் 27ம்தேதி முதல் மார்ச் 3ம்தேதி வரை நடைபெறவுள்ள 37 வது சப் ஜூனியர் தேசிய கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர்.

Similar News