உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 93.78 அடியாக குறைந்தது

Published On 2022-02-21 09:25 GMT   |   Update On 2022-02-21 09:25 GMT
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 93.78 அடியாக குறைந்தது.
ஈரோடு:

 பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 93.78 அடியாக குறைந்தது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றுகாலை  8 மணி நிலவரப்படி 93.78 அடியாக இருந்தது. அணைக்கு 1152 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 

அணையில் இருந்து அரக்கன் கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கனஅடியும், ஆற்றில் குடிநீருக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி என மொத்தம் 3 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
Tags:    

Similar News