உள்ளூர் செய்திகள்
நெமிலி அருகே கொல்லாபுரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நெமிலி அருகே கொல்லாபுரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த படியம்பாக்கம் கிராமத்தில் உள்ள பழமையான கொள்ளாபுரி அம்மன் கோயில் புணரமைக்கப்பட்டு இன்று காலை 1008 சீர்வரிசைப் பொருட்களுடன் குதிரைவாகனத்தில் செண்டை மேளங்கள் முழங்க கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
விழாவினையொட்டி முதல்நாள் 18&ந்தேதி வெள்ளிக்கிழமை காலை மங்கள இசையுடன் கோ பூஜை, அநுக்ய விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை தொடங்கி கணபதி, நவகிரக வேள்வி, சங்கல்பம், வருணபூஜை, எந்திரஸ்தாபனம் விக்ரகபிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவைநடந்தது மறுநாள் சனிக்கிழமை இரண்டாம் கால யாகம், துர்காஅஷ்ட, நட்சத்திரவேள்விகள்.
வேதபாராயணங்கள், மூன்றாம் கால யாகம், சுமங்கலி பூஜை, அஷ்டலஷ்மி வேள்வி ஆகியவற்றுடன் தேவாரம், திருவாசகங்கள் பாடப்பட்டது.
மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் காலயாகம், காயத்ரி ஜபம் கொள்ளாபுரிஅம்மன் மூலமந்திர வேள்விகள் மற்றும் 108 ஹோம மூலிகை அஷ்டதிரவியாஹுதி ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் நடந்து 1008 சீர்வரிசைப் பொருட்கள், யாகசாலை யிலிருந்து தீர்த்தகலசங்கள் வேதமந்திரங்கள் ஓத புறப்பாடாக கோயிலை வலம வந்து மூலவர் கொள்ளாபுரி அம்மனுக்கு மற்றும் விமானத்திற்கும் கலச தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த்து.
அதனைத்தொடர்ந்து விசேஷ தீபாராதனைகள் நடந்து அன்னதானம், வழங்கப்பட்டது.