உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-02-20 14:18 IST   |   Update On 2022-02-20 14:18:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர் மற்றும் மேல்விஷாரம் ஆகிய 5 நகராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. 

அரக்கோணம் நகராட்சியில் பதிவான வாக்குகள் அரக்கோணம் கிருஷ்ணா கல்லூரியில் எண்ணப்படுகிறது. 

அங்கு பதிவான வாக்குகளை பாதுகாப்பு அறையில் வைத்திருப்பதை தேர்தல் பார்வையாளர் வளர்மதி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதனைதொடர்ந்து ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் தக்கோலம், பனப்பாக்கம், நெமிலி, காவேரிப்பாக்கம், அம்மூர், விளாப்பாக்கம், திமிரி, கலவை ஆகிய 8 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளை மின்னனு வாக்கு எந்திரத்தை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இதனை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுக்காப்பு அறையை பூட்டி சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ்£ர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News