உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிக வாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், பூலாம்பாடி, குரும்பலூர், லப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
இதில், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 2,181 ஆண் வாக்காளர்களும், 3,581 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 5,764 பேர் என 55.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
குரும்பலூர் பேரூராட்சியில் 4,052 ஆண் வாக்காளர்களும், 4,707 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 8.759 என 78.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அரும்பாவூர் பேரூராட்சியில் 3,946 ஆண் வாக்காளர்களும், 4,697 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 8,643 பேர் என 78.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பூலாம்பாடி பேரூராட்சியில் 2,781 ஆண் வாக்காளர்களும், 3,307 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 78.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பெரம்பலூர் நகராட்சியில் 13,592 ஆண் வாக்காளர்களும், 15,259 பெண் வாக்காளர் களும் என மொத்தம் 28,851 வாக்குகள் பதிவாகியுள்ளன. நகராட்சியில் 66.01 சதவீத வாக்குகளாகும்.
மாவட்டம் முழுவதும், 26,552 ஆண் வாக்காளர்களும், 31,533 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 58,105 பேர் வாக்களித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் 69.11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.