உள்ளூர் செய்திகள்
பட்டினம்மருதூர் கடற்கரையில் கடல் சாகச விளையாட்டு போட்டிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை முதன்மை

தூத்துக்குடி பட்டினம்மருதூர் கடற்கரையில் சர்வதேச அளவில் கடல் சாகச போட்டிகள் நடத்த நடவடிக்கை - சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் தகவல்

Published On 2022-02-20 07:55 GMT   |   Update On 2022-02-20 07:55 GMT
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பட்டினம்மருதூர் கடற்கரையில் சர்வதேச அளவில் கடல் சாகச போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திர மோகன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி:

 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பட்டினம்மருதூர்  கடற்கரையில் நடைபெற்ற கடல் சாகச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் சந்திர மோகன் வெற்றி பெற்றவர்களுக்கு  பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பாக கடல் சாகச விளையாட்டுகள் செயல்படுத்துவது தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், துறைமுக  பொறுப்புக்கழக, முதன்மைப் பொறியாளர்,  போக்குவரத்து மேலாளர், துணை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர்களுடன்  ஆலோசனை   மேற்கொள்ளப்பட்டது.   
   
அதனைத் தொடர்ந்து துறைமுக பொறுப்புக்கழக பூங்கா கடற்கரைப் பகுதி  மற்றும் மாநகராட்சி  ரோச் பூங்கா பகுதியில் கடல் சாகச விளையாட்டுகள் செயல் படுத் துவது தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி பட்டினம் மருதூர் அருகில் அமைந்துள்ள கடற்கரையில் கடல் சாகச விளை யாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு  பகுதிகளிலிருந்து கடல் சாகச விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
   
தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சாகச நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு ஏதுவான கடற்கரைகள் உள்ளன. இவ்விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி பெற்றவர்களுக்கு தன்னார்வலர்களாகவும், பயிற்றுனர்களாகவும் இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப் படுவதோடு அவர்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் தேசிய அளவில் நடைபெற்று வரும் இக்கடல்சார் சாகச நிகழ்ச்சியினை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக  சர்வதேச அளவில் நடத்து வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு  சுற்றுலா வளர்ச்சிக் கழக மதுரை மண்டல மேலாளர் டேவிட்   பிரபாகர், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)  செல்வ லெட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News