உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 70.5 சதவீதம் வாக்குகள் பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 70.5 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட் சியில் 45 வார்டுகளுக்கும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் பர்கூர் 15, ஊத்தங்கரை 15, நாகோஜனஅள்ளி 15, காவேரிப்பட்டணம் 15, கெலமங்கலம் 15, தேன்கனிக்கோட்டையில் 18 என மொத்தம் 171 வார்டுகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 18வது வார்டில் திமுக வேட்பாளர் சீனிவாசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள 170 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இந்த தேர்தல் பெரும்பாலான பகுதிகளில் அமைதியாகவே நடந்து முடிந்தது.
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் நேற்று நடந்த 8 நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 70.5 சதவீத வாக்குகள் பதிவானது.
ஓசூர் மாநகராட்சியில் 63.97 சதவீதமும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 79.03 சதவீதமும், பேரூராட்சிகளை பொறுத்தவரை பர்கூரில் 81.54 சதவீதமும், தேன்கனிக்கோட்டையில் 70.9 சதவீதமும், கெலமங்கலத்தில் 74.41 சதவீதமும், காவேரிப் பட்டணத்தில் 80.15 சதவீதமும், நாகோஜன ஹள்ளியில் 84.07 சதவீதம், ஊத்தங்கரையில் 69.89 சதவீதம் என 6 பேரூராட்சிகளில் மொத்தம் 75.8 சதவீத வாக்குகள் பதிவானது. 8 நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 70.05 சதவீத வாக்குகள் பதிவானது.