உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

தஞ்சை மாவட்டத்தில் 13 இடங்களில் மின்னணு எந்திரம் பழுது

Published On 2022-02-19 14:47 IST   |   Update On 2022-02-19 14:47:00 IST
தஞ்சை மாவட்டத்தில் 13 இடங்களில் மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் 1 மணி நேரம் தாமதமாக வாக்குபதிவு தொடங்கியது.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் இன்று நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இருப்பினும் சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதால் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. 

அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்காக 139 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 36-வது வார்டுக்குட்பட்ட அறிஞ்ர் அண்ணா பள்ளி வாக்குசாவடியில் வாக்குபதிவு தொடங்கும் முன்னரே மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து என்ஜினீயர்கள் பழுதை சரி செய்தனர். அதன்பிறகு 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

இதேப்போல் 10-வது வார்டுக்குட்பட்ட வாக்குசாவடி ஒன்றில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. அதன் பின்னர் என்ஜினீயர்கள் அதனை சரி செய்த பின்னர் வாக்குபதிவு தொடங்கியது.
இதேப்போல் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் வாக்குபதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து பழுது சரி செய்த பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

மொத்தம் மாவட்டத்தில் 13 இடங்களில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பழுதால் தாமதமாக வாக்குபதிவு தொடங்கியது.

Similar News