உள்ளூர் செய்திகள்
மதுரை தொழிலாளர் நலத்துறை

தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

Published On 2022-02-18 12:23 GMT   |   Update On 2022-02-18 12:23 GMT
தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
மதுரை

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் - தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி  நகராட்சிகள் சட்டத்தின்படி அனைவரும் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நடை பெறும் பகுதிகளில் உள்ள  தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங் கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழி லாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குப்பதிவு நாளான நாளை (19&ந் தேதி) ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

தொழிலாளர் களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவதை கண்காணிக்க மற்றும் இது தொடர்பாக தொழிலா ளர்கள் புகார்களை தெரிவிப்பதற்காக மதுரை மாவட்டத்தில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் மதுரை எல்லீஸ்நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கட்டிட வளாகத்தில் தேர்தல் கட்டுப் பாட்டு அறை ஏற்படுத்தப் பட்டுள்ளது. 

தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது தொடர்பான புகார்களை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்)அலுவலக தொலைபேசி எண் 0452&2604388, தொழிலாளர் உதவி ஆணையரின் செல்போன் எண் 94453 98761, தொழி லாளர் துணை ஆய்வர்களின் செல்போன் எண்கள் 99448 34877, 98658 18636 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News