உள்ளூர் செய்திகள்
கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.

வாக்கு எண்ணும் பகுதியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

Published On 2022-02-18 15:13 IST   |   Update On 2022-02-18 15:13:00 IST
வாக்கு எண்ணும் பகுதியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம்  எறையூர் மகாத்மா பப்ளிக்  பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர்தெரிவித்ததாவது
வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் எறையூர் மகாத்மா பப்ளிக் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டு தனித்தனி காப்பு அறைகளில் வைக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சிக்கு 7 டேபிள்களும், ஒவ்வொரு பேரூராட்சிக்கும் தலா இரண்டு டேபிள்கள்  அமைக்கப் பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இப்பகுதிகளில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், காப்பு அறைகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டு வரும் பாதைகள், வேட்பாளர் களின் பிரதிநிதிகள் வரும் பாதைகள் என தனித்தனியாக தடுப்பு வழிகள் செய்யப்பட்டுள்ளது.

முழு மையாக அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆய்வு செய்யப் பட்டுள்ளது. அனைத்துபணிகளும் முடிவுறும் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

Similar News