உள்ளூர் செய்திகள்
நெமிலி அருகே இருதரப்பினரிடையே மோதல்
நெமிலி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள அசநெல்லி குப்பத்தை சேர்ந்தவர் சரன்ராஜ் (வயது30) இவர்தனது காரை நேற்று மதியம் நெமிலி ஈஸ்வரன் கோவில் அருகே நிறுத்தியிருந்தார்.
அப்போது அதேபகுதியைச்சேர்ந்த விநாயகம், ஏழுமலை, ராஜா உட்பட சிலர் சேர்ந்து காரை அடித்து நொறுக்கி சரன்ராஜை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் ஏழுமலை, அவரது தந்தை ஆனந்தன், இருவரையும் சரன்ராஜ், , சேட்டு, விமல், குமரவேல் ஆகியோர் சேர்ந்து, ஆபாச வார்த்தைகளால் பேசி இரும்பு கம்பி மற்றும் ஆயுதங்களால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதில் ஏழுமலை, ஆன்ந்தன் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக நெமிலி போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் துரைராஜ், ராஜா, ஏழுமலை மற்றும் சரன்ராஜ், விமல், சேட்டு, குமரவேல் ஆகியோரை கைது செய்தனர்.