உள்ளூர் செய்திகள்
186-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டனுக்கு ஆதரவாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓட்டுவேட்டை
சென்னை மாநகராட்சி 186-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டனுக்கு ஆதரவாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரசாரம் செய்தார்.
சென்னை:
சென்னை மாநகராட்சி 186-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டனுக்கு ஆதரவாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓட்டு சேகரித்தார்.
திறந்த வேனில் பாலாஜி நகர், பஜனை கோவில் தெரு, புழுதிவாக்கம் மெயின் ரோடு, பிள்ளையார்கோவில் தெரு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்துக்கு விடியல் தந்திருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சியின் மக்கள் நல திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஜெ.கே.மணிகண்டனை வெற்றி பெற செய்யுங்கள்.
அவரது வெற்றி என்பது இந்த பகுதி மக்களின் வெற்றி என்பதை மறவாதீர்கள் என்றார்.