உள்ளூர் செய்திகள்
தி.மு.க. வேட்பாளர் கே.ஏழுமலையை ஆதரித்து ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. பிரசாரம்

133-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கே.ஏழுமலையை ஆதரித்து ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. பிரசாரம்

Published On 2022-02-15 16:42 IST   |   Update On 2022-02-15 16:42:00 IST
சென்னை தி.நகர் பாண்டி பஜார் 133-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கே.ஏழு மலையை ஆதரித்து ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

சென்னை:

சென்னை தி.நகர் பாண்டி பஜார் 133-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கே.ஏழு மலையை ஆதரித்து ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அவர் செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு கிடைத்தது. எங்கள் ஓட்டு உதயசூரியன் சின்னத்துக்குதான் என்றனர்.

தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தவும் ஏழுமலையை வெற்றி பெற செய்யுங்கள் என்று ஜெ.கருணாநிதி பிரசாரம் செய்தார்.

அவருடன் வட்ட செயலாளர்கள் ஜெயகுமார், மதியழகன், மாவட்ட பிரதிநிதி பாண்டிபஜார் பாடா சுரேஷ், மாரி, வட்ட துணை செயலாளர்கள் தயாளன், ரமேஷ் வட்ட பொறுப்பாளர் ஹரி, ஆட்டோ மூர்த்தி, ஈஸ்வர், கார்த்திக், பலராமன், சுரேஷ், கண்ணன், எஸ்.டி.புவியரசு, அசோக்குமார், ஜெகன், நரேஷ், தமிழ்வெங்கடேசன், மாங்கா சுரேஷ், வெங்கடேசன், பாபு, மணிகண்டன், தீபக், அசோக்ஜி, பாலகுரு, முத்து, ராமமூர்த்தி, கிருஷ்ணா, கோபி, கார்த்திக், மகளிரணி தீபா, மஞ்சுளா, பிரேமா, தேவி ஆகியோர் சென்று வாக்கு சேகரித்தனர்.

Similar News