உள்ளூர் செய்திகள்
தபால் ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்ட காட்சி.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தபால் வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைப்பு

Published On 2022-02-15 16:00 IST   |   Update On 2022-02-15 16:00:00 IST
உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாநகராட்சியில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்குப்பெட்டிகள் இன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.
சேலம்:

சேலம் மாநகராட்சியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தபால் வாக்குகள் செலுத்துவதற்காக மாநகராட்சி மைய அலுவலகத்தில் தபால் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்  மாநகராட்சி கமிஷனரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ்  மேற்பார்வையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட தபால் வாக்குப்பெட்டிகள் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

Similar News