உள்ளூர் செய்திகள்
முக்கூடலில் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
முக்கூடல் ராஜாங்கம் தெருவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் நேற்று முக்கூடல்&நெல்லை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோதி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
முக்கூடல் ராஜாங்கம் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 34). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 12-ந் தேதி முக்கூடல்-நெல்லை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள தாம்போதி பாலம் அருகில் உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கணேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.