உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

காதலனால் கணவரை பிரிந்த பெண் போலீசில் புகார்

Published On 2022-02-15 15:25 IST   |   Update On 2022-02-15 15:25:00 IST
கணவரை பிரிந்த பெண் மீண்டும் காதலனால் ஏமாற்றப்பட்டது தொடர்பாக போலீசில் புகார்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த வெள்ளுர் பஸ்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பட்டத்தி மகள் பிரேமா (வயது 34). இவர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார்.

அதில், முசிறி அருகே உள்ள சீனிவாசனநல்லூர் ஏரி குளத்தை சேர்ந்த ராஜா மகன் சண்முகம் (36) என்பவரும் காதலித்து வந்தோம். இந்த காதல் விவகாரம் சண்முகத்தின் பெற்றோருக்கு தெரியவரவே, முதலில் திருமணம் செய்துவைப்பதாக சம்மதம் தெரிவித்தனர். பிறகு எனக்கு மூல நட்சத்திரம் இருப்பதாக கூறி திருமணம் செய்துவைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இதற்கிடையில் எனது தந்தை எனக்கு திண்டுக்கல்லை சேர்ந்த வேறு ஒருவருடன் திருமணம் செய்துவைத்தார். ஆனால் திருமணம் நடைபெற்ற முதல்நாள் இரவே சண்முகம் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு என்னிடம் வந்துவிடு என்று தொல்லை கொடுத்தார்.

மேலும் எனது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டேருந்தார். இந்த விவரம் எனது கணவருக்கு திருமணம் முடிந்த மறுநாளே தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் விவகாரத்து பெற்று சென்று விட்டார்.

இதனை தொடர்ந்து சண்முகம் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதை தொடர்ந்து, கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம். மேலும் என்னிடம் ரூ.50 ஆயிரம் மற்றும் நகைகளையும் வாங்கி கொண்டார்.

இந்நிலையில் சண்முகத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு நடைபெற்றது. இதனை அறிந்த நான் சண்முகத்தின் பெற்றோரிடம் கேட்டபோது அடித்து வெளியே தள்ளிவிட்டார்கள்.

என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி நகை & பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்தசண்முகம் மற்றும் அவரது தாயார் செல்வி, தந்தை ராஜா ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Similar News