உள்ளூர் செய்திகள்
தென்காசியில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் சாவு
தென்காசி பஸ்நிலையத்திற்குள் பஸ் திரும்பியபோது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் எதிர்பாராத விதமாக தவறி வெளியே விழுந்து இறந்தார்.
நெல்லை:-
தென்காசி மாவட்டம் சிவகிரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் பாண்டி (வயது 35). புளியங்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று புளியங்குடியில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்சில் பணியில் இருந்தார். இதையடுத்து தென்காசி பஸ் நிலையத்திற்குள் திரும்பியபோது படிக் கட்டில் நின்று கொண்டிருந்த தங்கவேல் பாண்டி எதிர்பாராத விதமாக தவறி வெளியே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தங்கவேல் பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.