உள்ளூர் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆலங்குடியில் போலீசாரின் கொடி அணி வகுப்பு நடை பெற்றது.
புதுக்கோட்டை:
உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையிலும், தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை எந்தவித பதட்டமும் இல்லாமல் நடக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆலங்குடி பேரூராட்சியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். கொடி அணி வகுப்பை ஏ.டி.எஸ்.பி.ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.
ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
பேரணியில், ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி.வடிவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஹேமலதா, அழகம்மை, பாஸ்கரன், சப்&இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், முருகையன், மகாலட்சுமி உட்பட ஏராளமான போலீசார் கலந்து கொண் டனர்.