உள்ளூர் செய்திகள்
கோவில் முன்பு நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
சென்னிமலையில் கோவில் முன்பு நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலையில் கோவில் முன்பு நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள மறவ பாளையத்தை சேர்ந்த வர் முத்துசாமி (66) விவசாயி. இவர் சென்னிமலை முருகன் கோவிலுக்கு தனது மோட் டார் சைக்கிளில் வந்தார்.
அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வந்தார்.
அப்போது அங்கு தனது மோட்டார் சைக்கிள் காணததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வாகனத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து முத்துசாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். ஈரோடு மணப்பள்ளம் வி.ஜி.பி. காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (44). இவர் சம்பவத்தன்று சென்னிமலை முருகன் கோவிலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்தார். மீண்டும் வந்து பார்த்த போது அங்கு மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சென்னிமலை போலீசில் புகார் கொடுத்தார்.
சென்னிமலை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் உமாபதி வழக்கு பதிவு செய்து அந்த 2 மோட்டார் சைக்கிள்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.